SuperTopAds

கல்முனை கிறீன்பீல்ட் தொடர்மாடிக் குடியிருப்பில் பாரிய சிரமதான நிகழ்வு

ஆசிரியர் - Editor IV
கல்முனை கிறீன்பீல்ட் தொடர்மாடிக் குடியிருப்பில் பாரிய சிரமதான நிகழ்வு

கல்முனை கிறீன்பீல்ட் தொடர்மாடிக் குடியிருப்பில்   பாரிய சிரமதான நிகழ்வு ஒன்று இன்று(18) இடம்பெற்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இக்குடியிருப்பில் நுளம்புப்பெருக்கம் மற்றும் முறையாக குப்பைகள் அகற்றப்படாமை தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

இதற்கமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபையினருடன் இணைந்து மேற்கொண்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக கல்முனைப் பிரதேச செயலாளர்  எம்.எம்.நஸீரின்  வழிகாட்டலிலும் கல்முனைப் பிரதேச செயலக தலைமை சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் நெறிப்படுத்தலிலும் கல்முனைக்குடி சமுர்த்தி வங்கிமுகாமையாளர் மோஷஸ் புவிராஜின்  ஒருங்கிணைப்பிலும் கல்முனைத்தெற்கு சுகாதாரம் வைத்திய அதிகாரி  வைத்தியர் றிஸ்னியின்  தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது குடியிருப்பை சூழவுள்ள பகுதியில் குப்பை கூழங்கள் அகற்றப்பட்டு துப்பரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நடவடிக்கையில் சமுர்த்தி உதவி முகாமையாளர்கள்  சிரேஷ்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சிரேஷ்ட பொதுச் சுகாதாரம் பரிசோதகர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் கல்முனை மாநகர உத்தியோகத்தர்கள் சமுர்த்தி சங்கத் தலைவர்கள் மற்றும் சமுர்த்திப் பயனாளிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.