பூ செடிகளுக்குள் மறைத்து கஞ்சா செடிகளை வளர்த்த கில்லாடி..! யாழ்.வடமராட்சி கிழக்கில் கைது, 15 கஞ்சா செடிகள் மீட்பு..

ஆசிரியர் - Editor

பூ செடிகளுக்குள் மறைத்து கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், 15 கஞ்சா செடிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. பளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபருடைய வீட்டினை நேற்றைய தினம் சோதனையிட்டபோது பூச்சாடியில் சூட்சுமமான 15-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை மறைத்து வளர்த்தமை கண்டுபிடிக்கப்பட்டது. 

சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது ஏற்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Radio