யாழ்.மருதங்கேணியிலும், கிளிநொச்சி கிருஷ்ணபுரத்திலும் கொரோனா மருத்துவமனைகள்..! அடுத்த சில நாட்களில் பணிகள் பூர்த்தியாகிறது, சுகாதார அமைச்சு துரித நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சையளிப்பதற்கு மருத்துவமனைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் - மருதங்கேணியிலும், கிளிநொச்சி - கிருஷ்ணபுரம் பகுதியிலும் குறித்த மருத்துவமனைகள் தயார் செய்யப்படுகின்றது. 

யாழ்.மருதங்கேணியில் உருவாக்கப்படும் கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவமனை 19ம் திகதி பூர்த்தியாக்கப்படவிருக்கின்றது. இதன்மூலம் யாழ்.மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டால் மருதங்கேணி 

கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையிலேயே சிகிச்சையளிக்கப்படும். மேலும் மருதங்கேணி வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பிறிதொரு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றது. மேலும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை

கிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இதன் பணிகள் 2 வாரங்களுக்குள் முடிவுறுத்தப்படவுள்ளது. சுமார் 100 படுக்கைகள் கொண்டதாக இந்த மருத்துவமைன அமைக்கப்படவுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகளின் பயிற்சி நிலையம் அமைந்திருந்த வளாகத்தில் இந்த மருத்துவமனை அமைக்கப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு