50,000 வீடுகளில் சிசிடிவி கமெராக்கள் ஹேக்கிங் -4,000 வீடியோக்கள் ஆபாச இனையதளத்தில்-

ஆசிரியர் - Editor II

சிங்கப்பூரில் 50 ஆயிரம் வீடுகளின் சிசிடிவி கமெராக்கள் ஹேக் செய்யப்பட்டு 4 ஆயிரம் வீடியோக்கள் ஆபாச இனையதளங்களில் பதிவேற்றியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 20 நிமிடங்கள்வரையான குறித்த வீடியோக்களில் பாலுட்டும் தாய்மார்கள் முதல் குழந்தைகள் வரை உள்ளனர்.

மேலும் வீடியோக்களில் பெரும்பாலோனோர் ஆடைகளற்றும், அல்லது மேலாடைகளோடு மட்டுமே இருக்கின்றனர். குளியலறை, கழிப்பறை, படுக்கை அறை உள்ளிட்ட வீட்டின் பல இடங்களில் அவர்கள் இருப்பது தெளிவாக உள்ளது.

ஒரு வீடியோவில் சிறுமி ஒருவர் வெறுமென உள்ளாடையோடு புத்தகங்களோடு அமர்ந்திருப்பது உட்பட வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இவை இணைய நெறிமுறை கமெராக்களிலிருந்து இந்த காட்சிகள் திருடப்பட்டுள்ளன.

வீடியோக்களை நெருக்கமாக பரிசோதித்தபோது, ஐபி கேமராக்களை ஹேக்கிங் செய்ய ஒரு குழு ஒன்று இதன் பின்னால் இருந்தது தெளிவாகத் தெரிகிறது என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு திருடப்பட்ட காணொளிகளில் சிறார்களும் இடம்பிடித்துள்ளார்கள் என்பதால் இது சிறார்களக்கு எதிரனா பாலியல் குற்றங்ளில் சேரும் என்று கூறப்படுகின்றது. மேலும், இதுபோன்ற குற்றங்களை களைய இன்டர்போல் போன்ற அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Radio