கனேடிய நபருக்கு கிடைத்த இரும்புப்பெட்டி: தோல்வியில் முடியும் முயற்சிகள் - நீடிக்கும் மர்மம்!

ஆசிரியர் - Admin
கனேடிய நபருக்கு கிடைத்த இரும்புப்பெட்டி: தோல்வியில் முடியும் முயற்சிகள் - நீடிக்கும் மர்மம்!

கனடாவில் பதுங்கு குழி ஒன்றை வாங்கிய நபருக்கு ஒரு இரும்புப்பெட்டி கிடைத்தது. Jonathan Baha'i என்னும் அவர் அந்த பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். 

காரணம் அந்த பெட்டியை திறப்பதற்கான குறியீட்டு எண் யாருக்கும் தெரியவில்லை. பூஜ்யம் முதல் 99 வரையிலான மூன்று எண்களைக் கொண்ட அந்த குறியீட்டு எண்ணைக் கண்டுபிடிக்க குறைந்தது ஒரு மில்லியன் முறை முயற்சி செய்யவேண்டும்.     

ஆனால், இதுவரை வெவ்வேறு எண்களை பயன்படுத்தி 400 முறை அந்த பெட்டியை திறக்க முயற்சி மேற்கோள்ளப்பட்ட நிலையில், மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எல்லாம் தோற்றுப்போய்விட்டன. ஆகவே, பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பது மர்மமாகவே நீடிக்கிறது.

கண்டிப்பாக உள்ளே ஏதோ இருக்கவேண்டும் என்று கூறும் பெட்டியின் உரிமையாளரான Jonathan, அதை எப்படியாவது திறந்துவிடுவதற்காக வல்லுநர்கள் குழு ஒன்றை அழைத்துள்ளார். அவர்களும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். சமூக ஊடகத்தில், நேரலையில் அந்த பெட்டியை திறக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்கள் அவர்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு