SuperTopAds

மக்களுடைய நீண்டகால போராட்டத்திற்கு வெற்றி..! 100 ஏக்கர் காணியை மக்களிடமே மீள வழங்கியது வனவள திணைக்களம்..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி - ஜெயபுரம் மக்களின் நீண்டகால கோரிக்கையின் அடிப்படையில் வனவள திணைக்களத்தின் ஆழுகைக்குட்பட்ட சுமார் 100 ஏக்கர் காணி மக்களிடம் மீள கையளிக்கப்பட்டிருக்கின்றது. 

போர் முடிவுக்கு வந்த பின்னர் தங்களுக்குரிய வயல் காணிகளைவிடுவிக்குமாறும் தொடர்ச்சியான நடவடிக்கையில் ஈடுப்பட்ட வந்த நிலையில் இன்று 11-10-2020 100 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது. 

ஜெயபுரம் மக்களுக்குச் சொந்தமான வயல் காணிகள் யுத்தம் நிறைவுக்கு வந்தநிலையில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாத வகையில் வனவளத் திணைக்களம் அனுமதி மறுத்துவந்த நிலையில் 

மக்கள் பல்வேறு நடவடிக்கைகளில்தொடர்ச்சியாக ஈடுப்பட்டு வந்தனர். 1983 ஆண்டு குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஒரு ஏக்கர் வீதம் வயல்காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் எனதெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் அந் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. தற்போது ஜெயபுரம் கிராமத்தில் 540 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று 100 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்டவனவளத் திணைக்கள அதிகாரி இதனை இன்று உத்தயோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.