SuperTopAds

கஞ்சா வியாபாரிகளை பிடிக்க சென்ற இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி சடலமாக மீட்பு..! நடந்தது என்ன?

ஆசிரியர் - Editor I

கஞ்சா விற்பனை தொடர்பான இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்றிருந்த இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் கிணற்றிலிருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

வவுனியா பட்டாணிச்சூர் பட்டக்காட்டு பகுதியிலே 33 வயது மதிக்கத்தக்க இராணுவ அதிகாரியே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பட்டாணிச்சூர் பட்டைக்காட்டு பகுதியில் சஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக நேற்று மாலை இராணுவ உள்ளக புலனாய்வாளர்களுக்கு இரகசியமாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து 

அங்கு விரைந்த இராணுவ உளவுதுறை அதிகாரி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரததால் அவரை தேடி அப்பகுதிக்கு சென்ற ஏனைய உளவுதுறை அதிகாரிகளால் இன்று அதிகாலை 

கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இராணுவ உளவுத்துறை அதிகாரியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி தேடுதலின் போது தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்தாரா அல்லது திட்டமிட்ட கொலையா என பல பல்வேறு கோணங்களில் வவுனியா பொலிஸாரும், இராணுவ உளவுத்துறை அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.