அம்பாறை மாளிகைக்காடு மையவாடி சுவரைப் பாதுகாப்பற்கான யாராவது வருவார்களா?(PHOTO)
இரு குழந்தையுடன் பெண் ஒருவர் பார்வையிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
ஜனாஸா மையவாடியின் சுற்றுமதில்கள் கடலரிப்புக்கு உள்ளாகி இடிந்து விழுந்துள்ளதை அடுத்து அதனை பாதுகாக்க நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலின் பாரிய அலைகளினால் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள ஜனாஸா மையவாடியின் சுற்றுமதில் உடைந்து விழுந்தமை காரணமாக புதைக்கப்பட்டுள்ள சடலங்கள் கடலில் அடித்தச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடரந்து அப்பகுதி மக்கள் ஒன்றினைந்து தற்காலிக தீர்வாக உரப்பைகளில் மண் இட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை பகல் இரவாக சுழற்சி முறையில் மூடி வருகின்றனர்.
இவ்விடயம் குறித்து எந்தவொரு அதிகாரியும் வந்துள்ளார்களா? என இரு குழந்தையுடன் பெண் ஒருவர் பார்வையிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.