SuperTopAds

சட்டத்தரணிக்கு தொலைபேசி அச்சுறுத்தல்-சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு ஆஜரான சம்பவம்

ஆசிரியர் - Editor IV
சட்டத்தரணிக்கு தொலைபேசி அச்சுறுத்தல்-சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு ஆஜரான சம்பவம்

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும்  சாரா என்ற  புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக   தகவல் வழங்கிய நபருக்கு ஆஜரான சட்டத்தரணிக்கு  இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு பரிசோதனை அறிக்கைகளை கொண்டு பகுப்பாய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமாக தேடப்படும்  சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணுபரிசோதனை அறிக்கை(னுNயு) பொருந்தவில்லை என மன்றில்  தெரிவிக்கப்பட்டதை  அடுத்து அவர் தப்பி சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய  மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு விசாரணையை தொடர்ந்து தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்று சில தினங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் எல்லைக்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி என்பவரை கண்டதாக 43 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பாதுகாப்பு தரப்பினரிடம் தகவல் ஒன்றினை வழங்கி இருந்தார்.

இவ்வாறு தகவல் வழங்கிய குறித்த நபருக்கு   இனந்தெரியாதோரினால் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக சட்டத்தரணி ஒருவர் ஊடாக கடந்த  ஒக்டோபர் மாதம்  திங்கட்கிழமை (5)  அன்று கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் தனக்கு நிகழ்ந்த அச்சுறுத்தல் விடயமாக சட்டத்தரணி ஒருவருடன்  நீதிவானுக்கு மூடிய அறையில் வாக்குமூலம் ஒன்றினை வழங்கி இருந்தார்.

இதற்கமைய குறித்த விடயத்தை  விசாரணை செய்த நீதிவான் மேலதிக நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்காக  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் குறித்த நபருக்கு ஆஜரான சட்டத்தரணிக்கு மறுநாள் இரவு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் தவணையில் அவ்வழக்கில் ஆஜராக கூடாது என தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட சட்டத்தரணி விடுப்பதாக கல்முனை நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக குறிப்பிட்டார்.