SuperTopAds

அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

ஆசிரியர் - Editor IV
அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலம் ஆரம்பிக்க இருக்கின்ற நிலையில் அம்பாரை மாவட்டத்திற்கான மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம்(7) மாலை அம்பாரை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் டி எம் எல் பண்டாரநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மாவட்டத்தில் கடந்த காலத்தில்  இடம்பெற்ற அனர்த்த நிலைமைகள்   தொடர்பாகவும் எதிர்காலத்தில் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல் தொடர்பாகவும்    முகாமைத்துவ அலகு உதவி பணிப்பாளர் எம் சி ஏ ரியாஸ் ரியாஸ் விளக்கம் அளித்தார்.

.அத்துடன் எதிர்வரும் பருவ பருவகால நிலமையில்  எதிர்கொள்ளும் வகையில் அம்பாரை மாவட்ட நீர்ப்பாசனம் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள திட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ,உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், மற்றும் செயலாளர்கள், மாகாண மற்றும் மத்தி  நீர்ப்பாசன திணைக்களம் ,  முப்படைகளின் அதிகாரிகள்  , விவசாயத் திணைக்களம் ,மீன்பிடி திணைக்களம் ,கல்வித்திணைக்களம் மின்சார சபை ,  உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

முக்கியமாக  கோரோனா  நிலைமைகள் மற்றும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலும் இன்றைய மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு அவை தொடர்பான தீர்மானங்களும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.