SuperTopAds

லண்டன்-ப்ரெண்ட் பகுதியில் மலேசியத் இளம் தமிழ் குடும்பம் படுகொலை! பொலிசார் தீவிர விசாரணை

ஆசிரியர் - Admin
லண்டன்-ப்ரெண்ட் பகுதியில் மலேசியத் இளம் தமிழ் குடும்பம் படுகொலை! பொலிசார் தீவிர விசாரணை

பிரித்தானியாவின் மேற்கு லண்டன் பகுதியில் இளம் தமிழ் தம்பதியினரினதும், அவர்களின் 3 வயது மகனினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 1 மணிக்கு முன்னதாக ப்ரெண்ட்ஃபோர்டு ஷார்டியில் உள்ள கிளேபாண்ட்ஸ் லேனில் உள்ள நவீன டவர் பிளாக்கில் மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஸ்கொட்லாந்து யார்ட் இன்று தெரிவித்துள்ளது.

மலேசியாவில் பிறந்த தமிழர்களான, குகா (40) மற்றும் பூர்ணா காமேஷா சிதம்பரநாதன்(30) ஆகியோரும், அவர்களது 3 வயது மகனினதும் சடலங்கள் மீட்கப்பட்டன.

என முறையே 40 மற்றும் 30 களில் உறுதிப்படுத்தினர்.

பூட்டப்பட்ட வீட்டுக்குள் தம்பதியினரிற்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அது குறித்து அயலவர்கள் பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.

பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது கணவன் குகா உயிராபத்தான காயங்களுடன் குற்றுயிராக காணப்பட்டுள்ளார்.

எனினும், சிறிது நேரத்திலேயே அவரும் உயிரிழந்தனர். கொலைகள் குறித்து யாரையும் பொலிசார் தேடவில்லை. குடும்ப வன்முறையினாலேயே இந்த சம்பவம் நடந்தது.

அவர்களின் வளர்ப்பு நாயும் கொல்லப்பட்டிருந்தது.

அயலவர்களின் தகவல்படி, தம்பதியினருக்கிடையில் அடிக்கடி மோசமான சச்சரவு உருவாகும். குறிப்பாக லொக் டவுனில் உறவு மோசமடைந்திருந்தது. மனைவியின் சத்தம் அடிக்கடி உச்சஸ்தாயில் கேட்பதாக தெரிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டில் கோலாலம்பரில் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினர், Cockapoo ரக நாயொன்றை வளர்த்து வந்தனர். அந்த நாயும் கொல்லப்பட்டுள்ளது.

பக்கத்து தொகுதியில் வசிக்கும் ஜமீலா சம்பவம் குறித்து தெரிவிக்கையில், ‘இது துயரமானது. அவர்கள் தங்கள் நாயை நேசித்தார்கள், நான் அவரை எப்போதும் நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்வதைப் பார்ப்பேன். அவர்கள் ஒரு அழகான குடும்பமாக இருந்தனர், இதில் எதுவுமே அர்த்தமில்லை. ‘பிளாட் முழுவதும் ரத்தம் இருப்பதாகவும், நாயும் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள்.’