கொரோனா விவகாரத்தில் பிரித்தானிய அரசை கடுமையாக எச்சரித்த தொற்றுநோயியல் நிபுணர்!
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை பிரித்தானியா அரசு பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்று தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் நீல் பெர்குசன் எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவில் இதுவரை கொரோனாவால் சுமார் 42,459 பேர் இறந்துள்ளனர், 5,18,222 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இந்நிலையில், பிரித்தானியாவில் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகிறது, ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் மேலாக இரட்டிப்பாகிறது.
சில பகுதிகளில் அதை விட வேகமாக, ஒவ்வொரு ஏழு நாட்களுக்கு ஒரு முறை எண்ணிக்கை இரட்டிப்பாகிறது என்று பேராசிரியர் நீல் பெர்குசன் கூறினார். தொற்றுநோய்களைக் குறைப்பதற்கான மிக முக்கியமான நடவடிக்கை வீடுகளுக்கிடையேயான தொடர்பைக் குறைப்பதே என அவர் கூறினார்.
பள்ளிகளைத் திறந்து வைக்க வேண்டும், ஆனால் அவற்றைத் திறந்து வைப்பதற்கு நாம் பலவற்றை கைவிட வேண்டியிருக்கும் என்றார். நீட்டிக்கப்பட்ட அரை கால அவகாசம் உள்ளிட்ட நடவடிக்கைகளை பிரத்தானியா அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என பேராசிரியர் நீல் பெர்குசன் வலியுறுத்தியுள்ளார்.