ஊரடங்கு சட்டம் இல்லை..! வதந்திகளால் மக்கள் குழப்பமடையவேண்டாம், ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு..
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக வெளியாகும் போலி செய்திகளை நம்பவேண்டாம் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. குறிப்பாக நாளை நாடளாவியரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலாகும் என போலி தகவல்கள் வெளியாகிறது.
அவை குறித்து மக்கள் விழிப்பாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.