SuperTopAds

தனி நாடாக மாறுமா நியூ கலிடோனியா? -வாக்கெடுப்பு இன்று ஆரம்பம்-

ஆசிரியர் - Editor III
தனி நாடாக மாறுமா நியூ கலிடோனியா? -வாக்கெடுப்பு இன்று ஆரம்பம்-

பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாக நியூ கலிடோனியா உருவாக்கப்படுவது குறித்து இரண்டாம் முறையாக இன்று ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

பாரிஸில் இருந்து 16,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நியூ கலிடோனியா தீவுக்கூட்டத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென 30 ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நியூ கலிடோனியா தனி நாடாக வேண்டுமா அல்லது பிரான்ஸின் அங்கமாக இருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 

கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இதே போன்ற வாக்கெடுப்பில் 56.4 சதவீத மக்கள் பிரான்ஸடன் இருப்பதையே விரும்பினர். இன்றைய வாக்கெடுப்பின் முடிவில் நியூ கலிடோனியா தனி நாடாகுமா என்பது குறித்து தெரியவரும்.