மாடுகளை அறுப்பது தடை தொடர்பில் வெளிவந்துள்ள செய்தியை மறுபரீசிலனை செய்ய வேண்டும்
மாடுகளை அறுப்பது தடை தொடர்பில் வெளிவந்துள்ள செய்தியை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.
நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டமும் 2020ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்கான 4 ஆவது பிரதேச சபையின் 30 ஆவது சபை அமர்வு புதன்கிழமை(30) நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் 2020 ஆகஸ்ட் மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல் 2020 ஆகஸ்ட் மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல் தவிசாளர் எம் . ஏ . எம் . தாஹிர் உரை இடம்பெற்றன.தொடர்ந்து தேசிய வாசிப்பு மாதம் தொடர்பாக உறுப்பினர்களும் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
மேலும் சபையின் எல்லைக்குட்பட்ட மக்களின் அடிப்படை நலன் சார்ந்த அபிவிருத்திகளை மேற்கொள்ள பிரதேசசபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இது தவிர உப தவிசாளர் வை . எல் . சுலைமாலெவ்வையின் முன்மொழிவுகளாக வடிகான் தப்பரவு செய்தல் வைத்தியசாலை வீதி குறைபாடுகள் வாகனங்கள் மேற்பார்வை கடமை தொடர்பாக ஆராய்தல் தொடர்பான முன்மொழிவுடன் உறுப்பினர்களான கே.எம் ஜெசிமா முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றிய பின்னர் சபை நடவடிக்கைகள் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சபை நிறைவு கட்டத்தில் விசேடமாக தவிசாளர் தேசிய வாசிப்பு மாதம் தொடர்பாக பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அக்கறை செலுத்தப்பட வேண்டும் என கூறயதுடன் அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் .அத்துடன் இலங்கையில் மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவது தடை செய்யப்படுவதாக வெளிவந்துள்ள செய்தி தொடர்பாக கூறிய அவர் பல பிரதேச சபைகளின் வருமானம் இறைச்சிக்கடைகளினால் தான் இயங்குவதாகவும் பெரும்பாலும் பேரினவாத சபைகளே பாதிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.எனவே இவ்விடயம் தொடர்பாக தெளிவான ஒரு பதிலளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.