இராணுவ ரோந்து நடவடிக்கைகள், சோதனை நடவடிக்கைகள் அதிகரிப்பு..! குழப்பத்தில் மக்கள்..

ஆசிரியர் - Editor
இராணுவ ரோந்து நடவடிக்கைகள், சோதனை நடவடிக்கைகள் அதிகரிப்பு..! குழப்பத்தில் மக்கள்..

வவுனியா நகரப்பகுதி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் திடீர் இராணுவ ரோந்து நடவடிக்கைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை 1 மணியிலிருந்து இராணுவத்தினர் வவுனியா நகர் பகுதியில் ரோந்தினை மேற்கொண்டதுடன் மன்னார் பிரதான வீதி வழியாக சென்றிருந்தனர்.

அத்தோடு வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களை வழிமறித்த இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களிலே ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரியவருகின்றது.

Radio