சடயந்தலாவ கண்ட பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக் கூட்டம்

ஆசிரியர் - Editor IV
சடயந்தலாவ கண்ட பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக் கூட்டம்

சடயந்தலாவ கண்ட  பெரும்போக   நெல் விதைப்புக்கான  ஆரம்பக் கூட்டம்  நாவிதன்வெளி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று(29)   நடைபெற்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன்    தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விதை நெல் விநியோகம்,  மானிய உர விநியோகம்   ,  நீர்ப்பாசனம்  நெற்செய்கை  , வாய்க்கால் பிரச்சினை,   மற்றும் கால்நடைகளை வெளியேற்றுதல் போன்ற  விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

 இதன் போது  விவசாயத்திணைக்களம்  ,  நீர்ப்பாசனத்திணைக்களம் , கமநல அபிவிருத்தித்திணைக்களம் ,    கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களம் ,   விவசாய கமநல காப்புறுதி சபை , வனவளத்திணைக்களம்  ,  வன ஜீவராசிகள் திணைக்கள் ,உள்ளிட்டவைகளின் கடந்தகாலச் செயற்பாடுகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன.

  அத்துடன் இவ்வருட பெரும்போக விவசாய வேலைகள் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர்  மாதம்  நடுப்பகுதியில் ஆரம்பிப்பது என  தீர்மானிக்கப்பட்ட துடன் விவசாய  காப்புறுதி  நிலங்களுக்குத் தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொடுக்கத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர இம்முறை நெற்செய்கை பண்ணவுள்ள விவசாயிகளிடம் தரப்படுத்தப்பட்ட விதை நெற்களை செய்கை பண்ணுமாறும்  மறுபயிர் செய்கை பன்னுவதற்கு ஆர்வ மூட்டப்பட்டதுடன்  விவசாயிகளினது சந்தேகங்களுக்கான விளக்கங்களும் சம்மந்தப்படப்ட அதிகாரிகளால் வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் நாவிதன்வெளி  பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன் ,  கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித்,  நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர் ஜெ.ஏ.அஹில், சவளக்கடை  விவசாய விரிவாக்கல்  பிரிவு  நிலையப்பொறுப்பதிகாரி எஸ்.சசிகரன்   ,சவளக்கடை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எம்.ஏ.ஏ. முஹிஸ் ,நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் அமரதாஸ ஆனந்த , விவசாய  கமநல சேவைகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் , கால்நடை வைத்திய அதிகாரி பிரதேச செயலக அதிகாரிகள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள்,  மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு