அதிகாலையில் பலத்த காற்றுடன் கனமழை..! மரம் முறிந்து வீழ்ந்ததில் வீடு, கடை சேதம்..

ஆசிரியர் - Editor
அதிகாலையில் பலத்த காற்றுடன் கனமழை..! மரம் முறிந்து வீழ்ந்ததில் வீடு, கடை சேதம்..

கிளிநொச்சி- ஜெந்திநகர் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பலத்த காற்றுடன் கூடிய மழையினால் பாரிய மாமரம் சரிந்து விழுந்ததால்  கடை ஒன்று முற்றாக சேதமாகியுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவு சேதமாகியுள்ளது.

அண்மைக்காலமாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.  இன்று அதிகாலை பலத்த காற்று வீசிய காரணத்தினால் மரம் சரிந்து விழுந்துள்ளது. இதன்போது அருகில் இருந்த

தச்சுப் பட்டறை முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அருகிலிருந்த விட்டு திட்டத்தினூடாக அமைக்கப்பட்டிருந்த வீட்டின் கூரையின் மேல் மரம் விழுந்ததனால் அவ் வீடு பகுதி அளவு சேதமாக்கப்பட்டுள்ளது.

மரம் சரிந்து விழுந்த கடையையும் வீட்டையும் கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன் நேரில் பார்வையிட்டுள்ளார்.


Radio