கடைகளை திறக்குமாறு வர்த்தகர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்..! அச்சுறுத்தல்களை மீறி ஹர்த்தாலுக்கு வர்த்தகர்கள் ஒத்துழைப்பு..

ஆசிரியர் - Editor
கடைகளை திறக்குமாறு வர்த்தகர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்..! அச்சுறுத்தல்களை மீறி ஹர்த்தாலுக்கு வர்த்தகர்கள் ஒத்துழைப்பு..

தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்தும், தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான தடையை எதிர்த்தும் வடமாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டுவரும் நிலையில், 

வவுனியா மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொலிஸார் ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று திறக்குமாறு அச்சுறுத்தல் விடுப்பதாக வர்த்தகர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். வவுனியா பசார் வீதியில் உள்ள கடைகளை திறக்குமாறு

தமிழ் வர்த்தகர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. எனினும், வர்த்தகர்கள் கடைகளைத் திறக்காமல் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio