ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இளைஞன் கைது

ஆசிரியர் - Editor III
ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இளைஞன் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இளைஞனை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அருகே நேற்று(25) மாலை சந்தேகத்திற்கிடமாக நபர் ஒருவர் நடமாடுவதாக புலனாய்வு தகவல் ஒன்றினை அடுத்து கல்முனை பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி சுஜித் பிரியந்தவின் வழிந்டத்தலில் அங்கு சென்ற கல்முனை மோட்டார் வாகன பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் நிஹால் சார்ஜன்ட் நவாஸ் மற்றும் மஜீட் ஆகியோர் சந்தேக நபரான இளைஞனை சோதனை செய்தனர்.

இதன் போது இளைஞனின் சேட் பையில் இருந்து 1 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை மீட்டு கைது செய்தனர்.

குறித்த சந்தேக நபர் அக்கரைப்பற்று பகுதியில் இருந்து ஹெரோயினை விநியோகம் செய்ய வருகை தந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

கைதானவர் 29 வயதுடையவர் என்பதுடன் சந்தேக நபரை தடுத்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Radio