சித்துப்பாத்தி மயானத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்துடன் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு பெரும் பங்கு..! முக்கிய ஆவணம் கசிந்தது...

ஆசிரியர் - Editor I

வேலியே பயிரை மேயும் செயல்பாடாக அரியாலை செம்மணி சிந்துபாத்தி இந்து மயாணத்திற்குள் கடந்த 10 ஆம் திகதி வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் டிப்பர் வண்டிகளில் ஏற்றி வந்து புதைத்தமையுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் பங்கு இருப்பதற்கான எழுத்து மூல கடிதம் வெளிவந்துள்ளது.

போதனா வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்ட மருந்துக்களின் கழிவுகள், வெற்றுப் போத்தல்கள், ஊசிக் கழிவுகள் என பெரும் தொகையானவை 4 டிப்பர் வண்டிகளில் ஏற்றிச் செல்லப்பட்டு குறித்த மயாணத்தில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் பாரிய குழிகள் தோண்டப்பட்டு கொட்டப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

இவ்வாறு கொட்டிய கழிவினை நல்லூர்ப் பிரதேச சபை அவதானித்து போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இதனை பகிரங்கப்படுத்த வேண்டாம் அவ்வாறு பகிரங்கப்படுத்தி மலையுடன் மோதவேண்டாம் என அச்சுறுத்தப்படுவதாக நல்லூர்ப் பிரதேச சபை உறுப்பினர்களும் தவிசாளரும் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு குழியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை மூடுவதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் நால்வர் மயானத்தில் நின்ற சமயம் நல்லுார் பிரதேசசபை உறுப்பினர்கள் அவர்களை மடக்கிய சமயம் வைத்தியசாலையில் பணியாற்றும் நால்வரும் இந்த விடயம் எமக்கு தெரியாது. 

அங்கிருந்து ஏற்றி வந்த கழிவினை மூடுமாறு அனுப்பி வைக்கப்பட்டோம் எனக் கூறியிருந்தனர். தமது சபையின் ஆளுகைக்குட்பட்ட விவசாய நிலத்தை அண்டியுள்ள மயானத்தில் இவ்வாறு சுகாதாரத்திற்கு ஆபத்தான மருத்துவக் கழிவுகளை பொறுப்பற்ற விதத்தில் திருட்டுத்தனமாக கொட்டி ஊருக்கும் மாவட்டத்திற்கும் 

பெரும் அழிவிற்கு காரணமாக செயல்படும் இச் செயல்பாட்டினை வன்மையாக கண்டிப்பதாக நல்லூர்ப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகமூர்த்தி தெரிவித்திருந்தார். இந்த விடயத்தை கண்டித்து நல்லூர்ப் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் மயானத்தின் முன்பாக ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டம் இடம்பெற்ற சமயம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொலிசார் சம்ப இடத்திற்கு வந்து வீதி தடையை விலக்கி பயணத்திற்கு ஒத்துழைத்ததோடு இவ் விடயம் தொடர்பில் உரிய தீர்வை எட்டுமாறும் கூறினார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் விதிமுறையை மீறிய வகையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் புற்றுநோய்க் கழிவுகளும் 

அதற்கு பயன்படுத்தப்படும் மருந்துகளும் இரகசியமாக எரியூட்டப்பட்டமை , பண்ணைப் பகுதியில் உள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் வளாகத்தில் அதிகளவான மருந்துகள் குடியிருப்பின் மத்தியில் இரகசியமாக தீ இட்டு எரித்தமை போன்ற சம்பவங்கள் வெளிவந்தமை போன்று தற்போது 3வது சம்பவமும் வெளிவந்துள்ளதாக அன்று சுட்டிக்காட்டினர். 

இருந்தபோதும் இந்தச் சம்பவத்திற்கும் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என நிர்வாகம் மறுத்தது. இருந்தபோதும் சுடலை நிர்வாக கடிதத்தில் வைத்தியசாலை இடிபாடுகளையும் வெற்றுப் போத்தல்களையும் அனுப்புமாறு வைத்தியசாலைப் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி எழுதி ஒப்பமிட்டு 

றப்பர் முத்தி்ரை பதித்த கடிதம் தற்போது வெளியில் கசிந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு