விளையாடி கொண்டிருந்த சிறுவனை மீன் தருவதாக ஏமாற்றி அழைத்து சென்று துஸ்பிரயோகம்..! இருவர் கைது..

ஆசிரியர் - Editor III
விளையாடி கொண்டிருந்த சிறுவனை மீன் தருவதாக ஏமாற்றி அழைத்து சென்று துஸ்பிரயோகம்..! இருவர் கைது..

விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை மீன் தருவதாக ஏமாற்றி அழைத்து சென்று துஸ்பிரயோகம் புரிந்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது மீன்வாடி ஒன்றில் இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

மைதானம் ஒன்றில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை மீன் தருவதாக அழைத்துச்சென்ற 27 வயதுடைய சந்தேக நபர் மற்றும் சம்பவத்தை பார்த்து 

பின்தொடர்ந்து சென்ற மற்றுமொரு 21 வயது மிக்க சந்தேக நபர்கள் இருவருமே கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய மாணவன் தற்போது கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேக நபர்கள் இருவரையும் இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio