சீனா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி!! -பக்க விளைவற்றது: ரஸ்யா அறிவிப்பு-

ஆசிரியர் - Editor III
சீனா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி!! -பக்க விளைவற்றது: ரஸ்யா அறிவிப்பு-

கொரோனா வைரசை எதிர்க்கும் சீனாவின் தடுப்பூசியை பரிசோதனைக்கு உட்படுத்திய ரஸ்யா அந்த தடுப்பூசியில் என்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை என்று அறிவித்துள்ளது. 

சீனாவின் கேன்சினோ பயாலஜிக்ஸ் என்ற உயர்தொழில் நுட்ப மருந்து நிறுவனம், இராணுவ அறிவியல் அகாடமியின் குழுவினருடன் இணைந்து ‘ஆட்5-என்கோவ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனையை ரஸ்ய நாட்டில் அங்குள்ள பெட்ரோவேக்ஸ் என்ற மருந்து நிறுவனம் நடத்துகிறது. இந்த ஊசி மருந்து ரஸ்ய மக்களுக்கு செலுத்தி சோதிக்கப்படுகிறது.

இதுபற்றி பெட்ரோவேக்ஸ் மருந்து நிறுவனம் நேற்று கூறுகையில், “தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர்கள் நன்றாக உள்ளனர். அவர்களில் யாருக்கும் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. 

இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு இதுவரை 3 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. தடுப்பூசி போட்டுக்கொள்கிறவர்கள் எங்களது நேரடி பார்வையில் ஒரு மாத காலம் வைத்திருக்கப்படுவார்கள். 

4 இடைக்கால பரிசோதனைகள் நடைபெறும். 6 மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாட்டு பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவார்கள்” என குறிப்பிட்டது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு