380 திமிங்கலங்கள் உயிரிழப்பு!! -கடற்கரையில் குவியும் சடலங்கள்-

ஆசிரியர் - Editor II
380 திமிங்கலங்கள் உயிரிழப்பு!! -கடற்கரையில் குவியும் சடலங்கள்-

அவுஸ்ரேலியாவின் தெற்கு கடற்கரையில் சிக்கியிருந்த 470 திமிங்கலங்களில் பெரும்பாலானவை இறந்துவிட்டன என்று அதிகாரிகள் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.

டாஸ்மேனியா மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த சில தினங்களாக திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன. இவற்றை மீட்கும் பணிகள் இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கடுமையான மற்றும் ஆபத்தான மீட்பு முயற்சிகளுக்குப் பின் குறைந்தது 380 திமிங்கலங்கள் இறந்துவிட்டன என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Radio