SuperTopAds

மண்ணெண்ணை போத்தலுடன் குடும்ப பெண் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம்..! பரபரப்பான சூழலில் பொலிஸார் தலையிட்டு சமாதானப்படுத்தினர்..

ஆசிரியர் - Editor I

தனக்கு வழங்கப்பட்ட காணியை மீள தருமாறு மாமியார் தன்னை வற்புறுத்துவதாக கூறி பெண்னொருவர் வவுனியா பிரதேச செயலகம் முன்பாக மண்ணெண்ணை போத்தலுடன் போராட்டம் நடத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மண்ணெண்ணை போத்தலை பறித்ததுடன், பிரதேச செயலருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுத்துள்ளனர். 

தனது கணவனின் தாயாரால் வவுனியா கோவில்குளத்தில் நான்குபரப்பு காணி கடந்த 2006 ஆம்ஆண்டு எழுத்துமூலமாக வழங்கப்பட்டது. தற்போது தனது கணவன் இறந்தநிலையில் அந்த காணியினை மீண்டும் அவர் உரிமைகோருவதுடன் 2010 ஆம் ஆண்டு பொலிசாரின் பாதுகாப்புடன் வீட்டினையும் அமைத்துள்ளார். எனவே கணவன் இறந்தநிலையில் 

தனக்கு கிடைக்கவேண்டிய காணியினை பெற்றுத்தருமாறு அவர் கோரிக்கை முன்வைத்ததுடன், தீக்குளிக்கபோவதாகவும் தெரிவித்தார். இதன்போது பதாதை ஒன்றை எந்தியபடி போராட்டத்தில் குதித்தள்ள குறித்த பெண் மண்எண்ணை போத்தில் ஒன்றினையும் உடன் வைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் அவருடன் கலந்துரையாடலை ஏற்படுத்தியதுடன்,

அவர் வைத்திருந்த மண் எண்ணை போத்திலை மீட்டு அவரை, பிரதேச செயலாளரிடம் அழைத்துச்சென்றனர். குறித்த காணி 1981 ஆம்ஆண்டிலேயே அவரது மாமியாரின் பெயரில் பதியப்பட்டிருப்பதாக பிரதேசசெயலாளர் இதன்போது தெரிவித்தார். இது தொடர்பாக சம்பந்தபட்ட மற்றயதரப்புடனும் கலந்துரையாடி இதற்கான தீர்வினை பரிசீலிக்கலாம் என 

அப்பெண்ணிடம் பொலிசாரும் உறுதியளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.