முகமாலை அகழ்வில் சோதிகா படையணி போராளிகளின் இலக்க தகடுகள், எலும்பு மீதிகள், துப்பாக்கிகள், சீருடைகள் மீட்பு..! தலைவரின் புகைப்படத்துடன்..

ஆசிரியர் - Editor I

முகமாலை பகுதியில் கடந்த 17ம் திகதி கண்ணிவெடியகற்றும் பிரிவினால் மனித எலும்புகள் மீட்கப்பட்ட இடத்தில் நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிபதி சரவணராஜா முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளின்போது த.வி.பு ஞா 0302 மற்றும் த.வி.பு. ஞ 0188 என்ற இலக்க தகடு மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் ஆகியன மீட்கப்பட்டது. 

குறித்த எலும்பு எச்சம் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் சோதிகா படையணி போராளி ஒருவருடையது என கூறப்படுகின்றது. மேலும் குறித்த எலும்புக்கூடுட்டுன் மண்ணையோடும் மீட்கப்பட்டிருப்பதுடன், சைனட்(குப்பி) ஒன்றும் பெண் போராளிகள் இடுப்பில் அணியும் பட்டியும் மீட்கப்பட்டது.  

அத்துடன் உரப்பைகள் விடுதலைப்புலிகள்ன வரி சீருடைகள் பச்சை கலர் சிரூடைகள் பாட்டா ஒன்று பற்றிகள், சம்போ போத்தல்கள் போன்றவையும் மீட்க்பட்டுள்ளதுடன், துப்பாக்கி ஒன்று, கைக்குண்டு இரண்டு, மகசீன் 8, கோல்சர் கவர் மூன்று போன்றவையும் மீட்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்தும் இன்றைய தினமும் அகழ்வு பணி முன்னெடுக்கபட உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு