நள்ளிரவில் வெளியான ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் டீசர்

ஆசிரியர் - Admin
நள்ளிரவில் வெளியான ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் டீசர்

ஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’ அடுத்த ஏப்ரல் 27-ம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியிடும் என்று தனுஷ் அறிவித்திருந்தார்.

ஆனால், ஜத்குரு பூஜயஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘காலா’ டீசர் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக தனுஷ் தெரிவித்தார். இதனால் மார்ச் 2ம் திகதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார். 

இந்நிலையில், இன்று (2-ம் திகதி) இரவு 12 மணியளவில் காலா டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டார்.