SuperTopAds

நுண்கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் தொடர்பில் அரசு தீர்மானம்..! மத்திய வங்கி ஆளுநர் நோில் ஆராய்வு..

ஆசிரியர் - Editor I
நுண்கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் தொடர்பில் அரசு தீர்மானம்..! மத்திய வங்கி ஆளுநர் நோில் ஆராய்வு..

நுண்கடன் நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான ஆய்வுகளை மத்திய வங்கி ஆளுநர் மேற்கொண்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிக்கும் தீர்மானம் அமைச்சரவையிலும் எடுக்கப்பட்டிருக்கின்றது. 

மேற்கண்டவாறு கிளிநொச்சி மாவட்ட செயலர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் கூறியுள்ளார். விழுது ஆற்றல்  மையத்தினால் “பெண் தலமைதாங்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களும், அடைந்த வெற்றிகளும்” எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நுண்நிதி கடன்களிலிலே ஈடுபட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக கடன்களை பெறுவதற்கு தேவையோடு இருப்பவர்கள் 

போன்றவர்களை இவ்வாறான நிறுவனங்களிற்குள் தள்ளாமல் அவர்களுடைய தேவைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பது தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இவ்விதமாக நுண்நிதி கடன்களிலே

சிக்குண்டவர்களை வெளியேற்றுவதற்கேற்ற வகையிலே கூட்டுறவு சங்கங்கள் ஊடாக குறைந்த வட்டியில் கடன் பெற்று சுயதொழிலில் முன்னேறி செல்வதற்கு ஏற்ற விதத்திலே முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.