கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் கைது
வீதியோரமாக கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் எல்லைக்குட்பபட்ட 11 ஆம் கொலனி பகுதியில் இன்று(21) முற்பகல் சந்தேகத்திற்கிடமாக இளைஞன் நடமாடி திரிவதாக விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய 25 வயதுடைய குறித்த இளைஞன் 1 கிலோ 155 கிராம் கஞ்சாவுடன் கைதானார்.
இச்சோதனை நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர் சேனாதீரவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட கட்டளை அதிகாரி கே.ஜி நளீன் பேரேரா வழிகாட்டலில்களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையின் தலைமையதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.எம்.எம்.யு.கே.வி தென்னகோன் தலைமையிலான விசேட அதிரடிப்படை குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன் சந்தேக நபர் மற்றும் சான்று பொருட்கள் யாவும் மத்திய முகாம் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.