பரந்தன் - செருக்கன் பகுதியில் பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு..! பெருமளவு கஞ்சா மீட்பு, சிறுகடல் வழியாக படகில் கடத்தல், கடத்தல்காரன் தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி பரந்தன் - செருக்கன் பகுதி ஊடாக படகு ஒன்றில் கடத்தப்பட்டுவந்த 77 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா போதை தடுப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் தப்பி ஓடியிருக்கின்றார். 

கிளிநொச்சி பொலிஸ் நிலைய போதை தடுப்பு பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பிரதி பொலிஸ்மா அதிபர் சம்பத் குமார லியககே (DIG - Sampath Kumara Liyanage) யின் உத்தரவிற்கமைய,

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சந்திரசேகர (SSP - Nishantha santhirasegara) கண்காணிப்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் புஸ்பகுமார (ASP - Pushpakumara) மற்றும் கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜீவகஸ்த சிறிசேன (CI - Jeevakastha srisen) ஆகியோரின் வழிநடத்தலில் 

மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இவை மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஊடாக வேறு பகுதிகளிற்கு கடத்தப்படுவதற்காக எடுத்துவரப்பட்ட சந்தர்ப்பதிலேயே பொலிசார் சுற்றவளைப்பினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாகவும் 

அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.இதன்போது 77.300 கிலோ கிராம் கஞ்சா, இரண்டு கையடக்க தொலைபேசிகள், 

படகு மற்றும் 40 கோஸ் பவர் கொண்ட இயந்திரம் ஆகியன பொலிசாரால் கைப்பற்றப்பட்டுற்றது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வரும் நிலையில் சான்று பொருட்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு