உள்ளுராட்சி மன்றங்களில் இடம்பெறும் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்

ஆசிரியர் - Editor IV
உள்ளுராட்சி மன்றங்களில் இடம்பெறும் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் முதல்வர்கள் மற்றும் தவிசாளர்கள் மன்றங்களில் இடம்பெறும் நிர்வாக விடயங்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தினர்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் பொதுநூலக கேட்போர் கூடத்தில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் ஒழுங்கமைப்பில் இன்று(19)  நடைபெற்றது.

இதன் போது நிகழ்வின் ஆரம்பத்தில்  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்   காரைதீவு   பிரதேச சபை  தவிசாளர் கே.ஜெயசிறில் இடம்பெற்ற நிலையில் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

அதாவது  உள்ளுராட்சி மன்றங்களில்  வருமான வரி பரிசோதகர் போதாமை பற்றி தீர்மானித்தல் , தொழிநுட்ப உத்தியோகத்தருக்கு ஆவானி பற்றாக்குறை தொடர்பான கலந்துரையாடல் ,பிரதேச சபையில் ஆவளிப் பற்றாக்குறை பற்றி தீர்மானம் மேற்கொள்ளல்,   தவிசாளருக்குரிய வாகனம் தொடர்பான கலந்துரையாடல் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம் பற்றிய தீர்மானம் , PSDG நிதி இல்லாமையினால் ஏற்படும் பிரச்சனைகள், கௌரவ ஆளுநர் அவர்களால் வெளியிடப்பட்ட வர்த்தமானி பற்றி முன்கூட்டியே தவிசாளர்களிடம் கலந்தாலோசிக்காமை பற்றிய கலந்துரையாடல் , தவிசாளரை சந்திக்க வருபவர்களுக்கான உபசரனை செலவு பற்றிய விபரம், பிரதேச செயலகத்தினால் செப்பனிடப்படும் பாதைகள் ,வடிகால்கள் தொடர்பான கலந்துரையாடல் , அம்பாறை மாவட்ட கௌரவ தவிசாளர்கள் ஒன்றிணைந்து சங்கம் அமைக்க தீர்மானம் மேற்கொள்ளல்  என்பன குறித்து பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் ஆர்.டபிள்யூ கமலராஜன் ஆலையடி வேம்பு பிரதேச சபை தவிசாளர் கிரோஜ்கரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு