டிக் டாக், வி-சாட் செயலிகளை பதிவிறக்க தடை!! -அமெரிக்கா அதிரடி-

ஆசிரியர் - Editor III
டிக் டாக், வி-சாட் செயலிகளை பதிவிறக்க தடை!! -அமெரிக்கா அதிரடி-

அமெரிக்காவில் டிக் டாக், வி சாட் ஆகிய செயலிகளை பதிவிறக்கம் செய்ய அரசாங்கம் அதிரடி தடை விதித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக எதிர்வரும் வரும் 20 ஆம் திகதி முதல் டிக் டாக், வி சாட் ஆகிய செயலிகளை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இரு செயலிகளும் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக ஆராக்கிள் நிறுவனத்துடன் பைட் டான்ஸ் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றி கருத்து கூறிய டிரம்ப்,  இரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி டிக்டாக் செயலியின் பெரும்பாலான பங்கு பைட்டான்ஸ் நிறுவனத்திடமே இருப்பதாக கூறப்படுகிறது.ஆரக்கிள் நிறுவனத்திடம் குறைந்தபட்ச பங்கு மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

எனவே இந்த ஒப்பந்தத்தை முழுமையாக ஆய்வு செய்து இதனால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரியவந்தால் மட்டுமே இந்த ஒப்பந்தத்துக்கு அனுமதி அளிக்கப்படும். தேச பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு