வழக்கம்போல் உற்சபத்தை நடாத்த அனுமதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! மக்களுக்கு அச்சுறுத்தலோ, இடையூறோ விளைவிக்ககூடாது எனவும் உத்தரவு..

ஆசிரியர் - Editor

நெடுங்கேணி - ஒலுமடு வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஷ்வரர் ஆலய உற்சபத்தை வழக்கம்போல் நடாத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன்,

ஆலய உற்சபத்தை தடுக்ககோரி நெடுங்கேணி பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களம் முன்வைத்த விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

மேலும் உற்சப காலத்தில் ஆலய நிர்வாகத்தினருக்கு அச்சுறுத்தலோ, இடையூறோ செய்யக்கூடாது என பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 குறித்த வழக்கில் முன்னிலையாகிய சிரேஷ்ட சட்டத்தரணிகளான சிற்றம்பலம் ஐயா, சிரேஷ்ட சட்டத்தரணி காண்டீபன், சிரேஷ்ட சட்டத்தரணி தயாகரன், 

சிரேஷ்ட சட்டத்தரணி சிரேஷ்ட சட்டத்தரணி குருஸ் உள்ளிட்ட பதினாறு சட்டத்தரணிகள் மன்னில் ஆதி லிங்கஸ்வரர் ஆலய நிர்வாகத்திற்கு சார்பாய முன்னிலை ஆகினர். 

Radio