15 நிமிடத்தில் 4 முறை நிலநடுக்கம்!! -ஜப்பானில் பயங்கரம்-

ஆசிரியர் - Editor III
15 நிமிடத்தில் 4 முறை நிலநடுக்கம்!! -ஜப்பானில் பயங்கரம்-

ஜப்பானில் அடுத்தடுத்து 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

அங்குள்ள மிகப்பெரிய தீவுகளில் ஒன்றான ஹோன்சு தீவின் கிழக்குப் பகுதியில் உள்ள மியாகி நகரில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.    

Radio