யாழ்ப்பாணம் நோக்கி படையெடுக்கும் அமைச்சர்கள்..! அடுத்தவாரம் இருவர் வருகை, மீள்குடியேற்றம், விவசாயம் குறித்து ஆராய திட்டம்..
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் முதல் முறையாக யாழ்.மாவட்டத்திற்கு இரு அமைச்சர்கள் அடுத்தடுத்து விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதன்படி இம் மாதம் 14ம் திகதி கிராமிய வீடமைப்பு பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்து காலை 10 மணிக்கு சுன்னாகம் சபாபதி நலன்புரி நிலையத்தில் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்கள் தொடர்பான கலந்துரையாடல்
ஒன்றை நடத்தவுள்ளார். அதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு மயிலிட்டி பலாலியில் அமைக்கப்ட்டுவரும் வீட்டுதிட்டங்கள் பார்வையிட்டு கலந்துரையாடுவதுடன், யாழ்.கலாச்சார மத்திய நிலையத்தை பார்வையிடுவதுடன், ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தவுள்ளார்.
இதேபோல் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இம் மாதம் 15ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து 9.30 மணிக்கு அச்செழு திராட்சை தோட்டத்திதை பார்வையிடுவதுடன், காலை 10.00 யாழ் மாவட்ட செயலகத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.
மதியம் 2.00 மணி விடத்தற்பபளையில் தோட்டங்களை பார்வையிடவுள்ள அமைச்சர், மதியம் 3.00 மணிக்கு கிளிநொச்சி பல்கலைகழக விவசாயபீடத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன், மாலை 4.00 மணி இரணைமடு பிரதேச விவசாய ஆராச்சி நிலையத்தையும் பார்வையிடவுள்ளார்.
தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு திருவையாறு நிலக்கடலை உற்பத்தி தோட்டத்தை பார்வையிடவுள்ளார். தொடர்ந்து 16ம் திகதி காலை 8.00 மணி நீர்வேலி வாழைப்பழத்தோட்டம் மற்றும் உருளைக்கிழங்கு தோட்டங்களிற்களை பார்வையிடுவதுடன், காலை 10 மணிக்கு
அச்சுவேலி விலங்குகள் பண்ணையையும் பார்வையிடவுள்ளார்.