வடகொரிய அதிபரை குறைத்து மதிப்பிட வேண்டாம்!! -டிரம்ப் பரபரப்பு டுவிட்-

ஆசிரியர் - Editor III
வடகொரிய அதிபரை குறைத்து மதிப்பிட வேண்டாம்!! -டிரம்ப் பரபரப்பு டுவிட்-

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உனை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுத சோதனை மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றார். 

அமெரிக்காவுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கும் கிம் ஜாங் உன் உடல் நலம் பற்றி சமீப காலமாக பல்வேறு ஊகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.   கடந்த ஆகஸ்ட் மாதம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாகவும், அவரது சகோதரி கிம் யோ ஜாங்கிடம் அதிபருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், இத்தகைய தகவல்களை மறுக்கும் விதமாக வடகொரியாவின் தொழிலாளர் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் அதன் தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்ட புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வட கொரிய அரசு ஊடகங்கள் வெளியிட்டன.

இந்நிலையில், கிம் ஜாங் உன் ஐ குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து டிரம்ப் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், கிம் ஜாங் உன் நலமாக உள்ளார். அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பதிவு சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு