SuperTopAds

கடந்த 3ம் திகதி காணாமல்போன காதல் ஜோடி..! 7 நாட்களின் பின் பாழடைந்த வீட்டுக்குள்ளிருந்து சடலமாக மீட்பு, கிளிநொச்சியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

கடந்த 7 நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த காதல் ஜோடி கிளிநொச்சி - பொியபரந்தன் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றுக்குள் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி - குமரபுரத்தை சேர்ந்த இளைஞனும், திருநகரை சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த 3ம் திகதி தொடக்கம் காணாமல்போனதாக கூறப்பட்ட நிலையில், 

7 நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். துாக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில், அவர்களுடைய சடலம் மிக பழுதடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. 

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.