SuperTopAds

பளை வைத்தியசாலையில் கடமை நேரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்..! 1 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்த மக்கள், கேள்வி கேட்டவர்கள் மீது சண்டித்தனம்..

ஆசிரியர் - Editor I
பளை வைத்தியசாலையில் கடமை நேரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்..! 1 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்த மக்கள், கேள்வி கேட்டவர்கள் மீது சண்டித்தனம்..

கிளிநொச்சி - பளை பிரதேச வைத்தியசாலையில் நோயாளிகள் வெளியே காத்திருக்க வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் இணைந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக நோயாளர்கள் வைத்தியசாலையில் காத்திருக்க நேர்ந்துள்ளது. 

இந்த சம்பவம் நேற்று கடந்த 7ம் திகதி இடம்பெற்றிருக்கின்றது. குழந்தை பிறந்து 45நாட்களான தாயார் ஒருவர் ஒரு மாத குழந்தையுடன் வருகை தந்துள்ளார். இவர் உடல் சோர்வான நிலையில் வந்துள்ளார். இவரை சோதித்த கடமையில் இருந்த வைத்தியர் அவரை இரத்த பரிசோதனை செய்து வருமாறு கூறியுள்ளார்.

அதனையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவும் 09/09/2020 வரும் எனவும் கூறியுள்ளனர். அதன் பின் அந்த தாயார் மருந்தெடுப்பதற்காக சென்ற போது மருந்தகத்தில் மருந்து வழங்குனர் நீண்ட நேரமாக இல்லை. வைத்தியசாலை கடமையில் உள்ள அனைத்து ஊழியர்கள் உட்பட வைத்தியர் எல்லோரும் 

சக ஊழியரின் பிறந்த தின கொண்டாட்டம் வைத்தியசாலையின் மேற்பகுதியில் கொண்டாடப்பட்டது. கடமை நேரத்தில் அனைவரும் பிறந்த தினம் கொண்டாடுகிறார்கள் என கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மூலம் அறியப்பட்டது. அதன் பின் அந்த தாயாரின் கணவர் வைத்தியரை சந்திக்க வினாவியுள்ளார். 

மேலே செல்ல அனுமதி இல்லை என பாதுகாப்பு உத்தியோகத்தரால் கூறப்பட்டது. இதையடுத்து அவரின் ஆனையை ஏற்று அவர் கீழே நின்று வைத்தியரை வருமாறு கூறியுள்ளார். அதற்கு வைத்தியர் காவலாளியிடம் பதில் அளித்ததாவது அந்த தாயாரின் கணவரை வெளியில் பிடித்து விடும்படியும் இல்லாவிடில் பொலீசாருக்கு தகவல் கொடுத்து வெளியேற்றும்படியும் 

அதன் பின் அந்த தாயாரும் கணவரும் வைத்தியசாலையை விட்டு வெளியேறினார்கள். அதன் பின் வைத்தியரின் வருகையை உறுதிபடுத்திய பின் மருந்து சிட்டையை கொண்டு மருந்தெடுப்பதற்காக வருகை தந்த அந்த குடும்பத்தார். அங்கு பணியாற்றும் கடமை நேரத்தில் பிறந்த நாளை கொண்டாடி நோயாளர்களையும் காத்திருக்க வைத்து 

அதை கேட்க சென்ற பொதுமக்களையும் அவதூராக பேசி வீண் பழிகள் போட்டுள்ளார்.அங்கு பணியாற்றும் தாதியாருக்கு மாற்று கருத்தாக இரத்த பரிசோதனை எடுக்கப்படாதலால்தான் அந்த தாயாரின் கணவர் வாதாடியதாக வைத்தியர் கூறியுள்ளார்இதையடுத்து அங்கு மீண்டும் வருகை தந்த அந்த குடும்பத்தாருடன் வைத்தியர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

குறித்த கணவர் பத்திரிகையாளராக கடமையாற்றுகிறார் என்பதை அறிந்த வைத்தியர் அவரை அந்த வைத்தியசாலையில் உள்ள பெண்களை வீடியோ பதிவு எடுப்பதற்கு வந்தீர்களா? என்று அவதூறாக கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் அதற்கு பதிலளித்த அவர்  தான் பத்திரிகையாளர் என்ற வகையில் வரவில்லை பொதுமகனாக கேட்கிறேன் 

கடமை நேரத்தில் பிறந்ததின கொண்டாட்டம் தேவையா என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.அங்கு வந்திருந்த போக்குவரத்து பொலீசாரிடம் வைத்தியசாலையுள்ள தாதியார்களையும் ஊடகவியலாளர் என அடையாளபடுத்தி தன்னையும் அச்சுறுத்தியதாக கூறியுள்ளார். மேலும் அந்த ஊடகவியலாளரின் ஊடக அடையாள அட்டை பரிசோதித்துள்ளார்.

வைத்தியர்தயவு செய்து நோயாளிகளை மேலும் நோயாளியாக்காதீர்கள்உங்களுக்கென கொடுக்கப்படுகிற நேரத்தில் நீங்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள் உங்களிடம் வரும் நோயாளர்கள் அவர்களது வேலைகளை விட்டு பிள்ளைகளை வேறு வீடுகளில் விட்டும் எத்தனையோ சிரமத்தின் மத்தியில் வருகின்றனர்.

உங்களை நம்பி அவர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் சில வைத்தியர்கள் நடந்து கொள்கின்றனர்.