SuperTopAds

கொரோனா தாண்டவம்: 10 இலட்சம் இறப்பு சான்றிதழ்களை அச்சிடும் நாடு!!- வெளியானது அதிர்ச்சி தகவல்-

ஆசிரியர் - Editor III
கொரோனா தாண்டவம்: 10 இலட்சம் இறப்பு சான்றிதழ்களை அச்சிடும் நாடு!!- வெளியானது அதிர்ச்சி தகவல்-

உயிர் கொல்லி கொரோனா வைரஸ் பரவலின் கோர தாண்டவத்தினால் 10 இலட்சத்திற்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சடிக்க மெக்சிக்கோ அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரழப்பவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும், மெக்சிக்கோ நான்காவது இடத்திலும் உள்ளன.

இந்நிலையில், 10 இலட்சத்திற்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சடிக்க மெக்சிக்கோ முடிவு செய்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மெக்சிக்கோ அரசு தரப்பில், இறப்புச் சான்றிதழ்கள் முழுவதுமாக தீர்ந்துவிட்டதாக மெக்சிக்கோவின் பஜா கலிபோர்னியா மாகாணம் தெரிவிக்கிறது.

இதேபோல், ஸ்டேட் மாகாணம் மற்றும் மெக்சிக்கோ சிட்டி நகரத்தில் இறப்புச் சான்றிதழ்கள் குறைவாகவே உள்ளன. போலி சான்றிதழ்களை தடுக்க 10 இலட்சத்திற்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சடிக்க முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.