SuperTopAds

நாய் கடிக்கு தடுப்பூசி போட்டுவிட்டு வீடு திரும்பியர் மரணம்..! வைத்தியசாலையை முற்றுகையிட்ட மனைவி, பிள்ளைகள், உறவுகள்.. சடலத்தை ஏற்க மறுத்து போராட்டம்...

ஆசிரியர் - Editor I

நாய் கடிக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் தடுப்பூசி ஏற்றுவதற்காக வைத்தியசாலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர் திடீர் சுகயீனமடைந்து உயரிழந்துள்ள நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையை முற்றுகையிட்டிருக்கும் பொதுமக்கள் சடலத்தை ஏற்க மறுத்து எதிர்ப்பு தொிவித்து வருகின்றனர். 

மகாறம்பைக்குளம் கிராமத்தை சேர்ந்த எஸ்.சிவஞானம் (வயது48) என்பவர் நாய் கடிக்கு இலக்காகி தடுப்பூசி ஏற்றுவதற்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அங்கு தடுப்பூசி ஏற்றியதன் பின்னர் 10.30 மணியளவில் வீட்டுக்கு திரும்பிய அவர் வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்தை உட்கொண்டுவிட்டு

படுத்து உறங்கிக் கொண்டிருந்த நிலையில் 11.15 மணியளவில் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு 11.30 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில சேர்க்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவின் வைத்தியர்கள் அவருக்கு 30 நிமிடங்களாக சிசிக்சையளித்த போதிலும் 


சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து வைத்தியர்களின் கவனக்குறைவினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் அவருக்கு தடுப்பூசி ஏற்றும் சமயத்தில் சீரான முறையில் பரிசோதனை மேற்கொள்ளவிள்ளை எனவும் தெரிவித்து அவரின் உறவினர்கள் , 

பிள்ளைகள் வைத்தியசாலை முன்றலில் கதறி அழுவதுடன் சடலத்தினையும் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் இறந்தவருக்கு சிகிச்சை மேற்கொண்ட அவசர சிகிச்சை பிரிவின் வைத்தியா ் கூறுகையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும்போதே அவருக்கு இயத துடிப்பு இருக்கவில்லை.

மேலும் தானாகா சுவாசிக்கும் தன்மையும் இருக்கவில்லை அதன் பின்னர் நாம் எம்மால் முடிந்தளவு சிகிச்சையளித்தோம் எனினும் அவரை காப்பாற்ற முடியவில்லை . திடீர் மரண விசாரணை முடிவுகளின் பின்னரே மரணத்திற்கான காரணத்தினை தெரிவிக்க முடியுமேன தெரிவித்தார்.


எனினும் உறவினர்கள் சடலத்தினை ஏற்க மறுப்பு தெரிவித்து அவசர சிகிச்சை பிரிவு முன்பாக கூடியுள்ளமையினால் வைத்தியசாலையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகின்றது.