மீண்டும் தீப்பற்றி எரிகிறது எண்ணை கப்பல்..! இடர் தணிப்பு நடவடிக்கையில் கடற்படை, விமானப்படை மீண்டும் களமிறங்கியது..
அம்பாறை - சங்கமங்கண்டி கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்த எண்ணை கப்பலில் தீ அணைக்கப்பட்ட நிலையில் இன்று மாலை மீண்டும் கப்பலில் தீ பரவ ஆரம்பித்துள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
கடும் போராட்டத்திற்கு மத்தியில் அணைக்கட்டு சர்வதேச கடற்பரப்பிற்கு இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் எம்.டி.நியூ டயமண்ட் எண்ணெக் கப்பலில்
மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீ முழுமையா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் கப்பலில் இருந்து அதிக வெப்பம் வெளியேறுவதால் இரசாயனப் பதார்த்தங்களையும்
நீரையும் பயன்படுத்தி வெப்பத்தைத் தணிப்பதற்கான முயற்சிகள் தொடர்வதாக கடற்படை தெரிவித்துள்ளது. கப்பலில் மீண்டும் தீ பரவலை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுவருவதாக கடற்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.