எம்.டி.நியூ டைமன்ட் எண்ணை கப்பல் குறித்து ஆராய பிரிட்டன், நெதர்லாந்து, இந்திய ஆய்வாளர்கள் குழு இலங்கைக்குள்..! (படங்கள்)
அம்பாறை - சங்கமன்கண்டி கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்த எம்.டி.நியூ டைமன்ட் எண்ணை கப்பல் குறித்து ஆராய்வதற்காக பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் குழு இலங்கைக்கு வந்திருக்கின்றது.
இதேவேளை, கப்பலில் இருந்து எண்ணை கசிவு ஏற்பட்டால் அதனை தடுக்கும் வகையில் இந்திய கடற்பாதுகாப்பு திணைக்களத்தின் 20 பொறியியலாளர்கள் அந்த பகுதிக்கு வருகைத் தந்துள்ளனர். மேலும் இவ்வாறு மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக
வருகை தந்த நிபுணர்கள் குழுவில் இரு பெண்களும் உள்ளடங்குகின்றனர். இந்த நிபுணர் குழு குறித்த கப்பல் தொடர்பில் ஆராயும் முகமாக அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று(6) மாலை வாடிவீட்டு கடற்கரையோரமாக சென்று கடற்படையின் வேகப்படகின் ஊடாக
ஆழ்கடலில் தரித்துள்ள கடற்படையின் போர் கப்பல் ஒன்றின் ஊடாக தீப்பற்றிய பாரிய கப்பலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.