தனி வழியில் மணிவண்ணன் பயணம் ஆரம்பம்..! தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணி மணியுடன்..

ஆசிரியர் - Editor I
தனி வழியில் மணிவண்ணன் பயணம் ஆரம்பம்..! தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணி மணியுடன்..

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர், பேச்சாளர் பதவிகளில் இருந்தும், கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும் மணிவண்ணன் நீக்கப்பட்ட நிலையில், தமிழ்தேசிய இளைஞர் பேரவை என்ற அமைப்பின் ஊடாக பயணிக்க மணிவண்ணன் தீர்மானித்துள்ளார். 

மணிவண்ணனைத் தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பாகச் செயற்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த அமைப்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன் உட்பட பல மாநகர, நகர, பிரதேச சபை உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர்களும் இணைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு