SuperTopAds

நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது மோதிய பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கார்..! சற்றுமுன் கோர விபத்து..

ஆசிரியர் - Editor I
நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது மோதிய பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கார்..! சற்றுமுன் கோர விபத்து..

நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் கார் சாரதி காயங்கள் இன்றி அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். 

இந்த சம்பவம் ஏ-9 வீதியில் கிளிநொச்சி - கரடிப்போக்கு சந்தியில் இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கரடிப்போக்கு சந்தியில் பாரவூர்தி ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார் 

பாரவூர்தி மீது மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் காரை ஓட்டிவந்த கிளிநொச்சி - பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காயங்கள் இன்றி உயிர்தப்பியிருக்கின்றார். 

சம்பவத்தையடுத்து ஏ- 9 வீதியில் 30 நிமிடங்களுக்கும் மேல் வாகன நெரிசல் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.