SuperTopAds

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பட்டதாரிகளின் தகைமை சான்றிதழ்களை பரீட்சிக்கும் நேர்முக தேர்வு

ஆசிரியர் - Editor IV
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பட்டதாரிகளின் தகைமை சான்றிதழ்களை பரீட்சிக்கும் நேர்முக தேர்வு

அரச சேவையில் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளின் அடிப்படை தகைமை சான்றிதழ்களை பரிசீலனை செய்யும் நேர்முகத்தேர்வு பிரதேச செயலகங்களில் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைவாக நாவிதன்வெளி பிரதேச செயலகத்திலும் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின்  வழிகாட்டலில் நேர்முகத்தேர்வு  இன்று(4) காலை முதல் மாலை வரை இடம்பெற்றது.

இதன் போது  கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித் ,திட்டமிடல் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எஸ்.சிவபாதம் ,நிர்வாகப்பிரிவின்  முகாமைத்துவ சேவை  உத்தியோகத்தர் எம்.ரி ஹமீட்,விதாதா வள நிலைய விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர் எம்.முருகானந்தம் ,  உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  உள்ளிட்ட குழுவினர் அடிப்படை தகைமை சான்றிதழ்களை பரிசீலனை செய்யும் நேர்முகத்தேர்வினை நடாத்தியதுடன் நேர்முகத்தேர்வின் ஒழுங்கமைப்பை பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.யோகஸ்வரன்  மேற்கொண்டிருந்தார்.

அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாயவின் எண்ணக்கருவிற்கமைய தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று நாடளாவிய ரீதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

இதன் அடிப்படையில் நாவிதன்வெளி  பிரதேச செயலகத்தில் 102 பட்டதாரிகள்   அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன் அவர்களுக்கு நியமனங்களும்  கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கி வைக்கப்பட்டன.