SuperTopAds

தீ பற்றி எரியும் எண்ணை கப்பலில் ஒருவர் பலி, தொடரும் மீட்பு பணி..! இந்தியா மற்றும் ரஷ்யா கடற்படைகளின் மீட்பு படைகளும் மீட்பு பணியில் இறங்கின..

ஆசிரியர் - Editor I
தீ பற்றி எரியும் எண்ணை கப்பலில் ஒருவர் பலி, தொடரும் மீட்பு பணி..! இந்தியா மற்றும் ரஷ்யா கடற்படைகளின் மீட்பு படைகளும் மீட்பு பணியில் இறங்கின..

இலங்கை கடல் எல்லைக்குள் தீ பிடித்து எரிந்து கொண்டிருக்கும் பனாமா நாட்டுக்கு சொந்தமான எண்ணை கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. 

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், கப்பலின் இயந்திர அறையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இதேவேளை சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணையுடன் எரிந்து கொண்டிருக்கும் கப்பலில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. மீட்பு பணிகளில் 

இந்தியா மற்றும் ரஷ்ய கடற்படைகளின் மீட்பு படைகள் இலங்கை கடற்படையினருடன் மீட்பு பணிகளில் இறங்கியுள்ளன. அந்த கப்பலில் பணிக்குழாமினர் 23 பேர் இருந்துள்ள நிலையில் அவர்களில் 22 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கடற்படை தெரிவித்திருந்த நிலையில் தற்போது கப்பலில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தீப்பரவலால் காயமடைந்த பணிக்குழாம் உறுப்பினர் ஒருவர் மீட்கப்பட்டு கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.