SuperTopAds

'இனி தொலைதூரத்தில் இருந்த படி திருமணம் செய்து கொள்ளலாம்' - பிரித்தானியாவின் புதிய சட்டம்!

ஆசிரியர் - Admin
'இனி தொலைதூரத்தில் இருந்த படி திருமணம் செய்து கொள்ளலாம்' - பிரித்தானியாவின் புதிய சட்டம்!

பிரித்தானியாவில் சட்ட ஆணையத்தால் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களின் கீழ் எதிர்காலத்தில் தொற்றுநோய் ஏற்பட்டால், ஜூம் போன்ற வீடியோ கான்பரன்சிங் தளங்களில் தம்பதிகள் தொலைதூரத்தில் இருந்த படி திருமணம் செய்து கொள்ளலாம். பழங்கால விக்டோரியன் திருமணச் சட்டங்களைப் மதிப்பாய்வு செய்த பிரித்தானியா சட்ட ஆணையம், எதிர்காலத்தில் தொற்றுநோய் போன்ற எந்தவொரு தேசிய அவசரகாலத்திலும் திருமணங்களை தொலைதூரத்தில் இருந்த படி நடத்துவதற்கு ஒரு புதிய சட்டம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.     

உதாரணமாக, தம்பதியில் ஒருவர் மருத்துவமனையில் இருக்கலாம் அல்லது அவர்கள் தூரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கலாம், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நேரில் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போகலாம். எனவே திருமணத்தில் கலந்துக்கொள்ள வேண்டிய ஒவ்வொரு நபரும் ஜூம் போன்ற வீடியோ கான்பரன்சிங் தளங்களில் உள்நுழைய வேண்டும்.

ஒவ்வொரு தம்பதியினரும் தங்கள் சம்மதத்தை அளிப்பார்கள், இதை அதிகாரியும் சாட்சியும் தொலைதூரத்தில் இருந்த படி கேட்பார்கள் மற்றும் கவனிப்பார்கள் என்று சட்ட ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த திட்டங்கள் குறித்து டிசம்பர் 3 வரை சட்ட ஆணையம் ஆலோசிக்கும் மற்றும் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.