டிப்பர் வாகன சாரதியின் அசண்டையீனம்..! அதிரடிப்படை வீரர் பலி, மேலும் ஒருவர் படுகாயம். கிளிநொச்சியில் சம்பவம்..
கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் இன்று மாலை 4.00 மணியளவில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் விசேட அதிரடிப்படை உத்தியோகஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி நகர் பகுதியில் இருந்து இரண்டு டிப்பர் வாகனங்கள் 155 ஆம் கட்டை சந்தி பகுதியிருந்து பாரதிபுரம் திரும்பும் வேளையில் விசேட எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதன்போது விசேட அதிரடிப்படை உத்தியோகஸ்த்தர் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார். இல 55,படிநெகுடுவாவ -மயில்கஸ்வொவ சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய தனபாலகே ரோஷன் பிரதீப் (பி.சி 87958) பலியாகியுள்ளார்.
கிளிநொச்சி நகர் பகுதியில் இருந்த வந்த டிப்பர் வாகன சாரதி அசமந்தப் போக்கில் திருப்பியபோது விசேட அதிரடிப்படை உத்தியோகஸ்த்தர் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்தமுடியாமல்
பாரதிபுரம் பக்கம் திருப்பிய டிப்பர் வாகனத்துடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மற்றொருவர் படுகாயங்களுடன் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவத்தையடுத்து டிப்பர் வாகன சாரதி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்