SuperTopAds

கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை..! கிளிநொச்சி சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களை பூட்டிய பிரதேசசபை, அந்தரிக்கும் வர்த்தகர்கள்..

ஆசிரியர் - Editor I

வர்த்தகர்களுடனான கலந்துரையாடலுக்கு அழைத்தும் வரவில்லை. என்ற காரணத்தை காண்பித்து மரக்கறி சந்தையை பிரதேசபை பூட்டியதை கண்டித்து வர்த்தகர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். 

நேற்றய தினம் 24ம் திகதி மாலை 3 மணிக்கு கிளிநொச்சி மரக்கறி சந்தை வர்த்தகர்களுடனான சந்திப்பு ஒன்றுக்கு கரைச்சி பிரதேசசபையினால் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. 

எனினும் குறித்த கூட்டத்தில் வர்த்தகர்கள் கலந்து கொள்ளாத நிலையில் சந்தையில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டதுடன், இன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொண்டு 


வரவை உறுதிப்படுத்தியதன் பின்னர் வர்த்தக நிலையங்களை திறக்குமாறு பணிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் கரைச்சி பிரதேசசபையின் இத்தகைய நடவடிக்கையினை கண்டித்து 

சந்தை வர்த்தகர்கள் இன்று காலை தொடக்கம் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.