SuperTopAds

அம்பாறை பிரதேசங்களில் பழவகைகள் விற்பனை அதிகம்

ஆசிரியர் - Editor IV
அம்பாறை பிரதேசங்களில் பழவகைகள் விற்பனை அதிகம்

கிழக்கு மாகாணத்த்தில் அம்பாறை மாவட்டத்தில்  தற்போது நிலவும் திடீர் வெப்பநிலை மாற்றம் காரணமாக   பிரதான வீதியோரங்களில்  உள்ள கடைகளில்  வெப்பத்தை தணிப்பதற்காக   பழங்களை பொது மக்கள் அதிகமாக கொள்வனவு செய்து வருகின்றனர்

 இதனால்  அம்பாறை  மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில்  அரிய வகை மூலிகை மருத்துவ குணம் கொண்ட பழங்களின் விற்பனை ஆரம்பித்துள்ளது.

 வருடந்தோரும்  ஜூலை  மற்றும் ஆகஸ்ட் பருவ காலங்களில் அரிய வகை பழவகைகளான ரம்புட்டான்,  துரியன் , கொய்யா மற்றும் மங்குஸ்தான்  போன்றவைகள் விற்பனை செய்யப்படுவதுடன்  இவ்வகை பழங்களின் விற்பனை மும்முரமாக இடம்பெறுகின்றதை காண முடிகின்றது.இவை தவிர ஆஸ்திரேலியா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளிலிருந்தும்   பழ வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு  விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சில இடங்களில்   மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பழவகைகள்  விற்பனை செய்யப்படுகின்றன.

 குறித்த பழ வகைகளில் மாதுளை, ஒரஞ்சு, ஆப்பிள், பச்சை திராட்சை,  உள்ளிட்ட பல்வேறு பழங்க  பொதுமக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்கின்றனர்.கொரோனா அனர்த்த்தின் பின்னர் பழ விற்பனையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில் தற்போது அதில் இருந்து மீண்டு பழவிற்பனையில்   ஈடுபட்டுள்ளனர்.